மொசாம்பிக் நாட்டில் கடல் பகுதியில் அக்டோபர் 16-ம் தேதி ஒரு சிறிய படகு கவிழ்ந்தது. அந்த படகு எண்ணெய் கப்பலை சரி செய்யும் வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்றது.
படகில் 21 பேர் இருந்தனர், அதில் 14 பேர் இந்தியர்கள். இந்த விபத்தில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராக் ராதாகிருஷ்ணன் (35 வயது) உயிரிழந்தார். அவர் கடல் வேலையில் 7 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
ஸ்ரீராக் அக்டோபர் 13-ம் தேதி வேலைக்காக மொசாம்பிக் சென்றார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். அவரது உடல் தேடி கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அழுகிய நிலையில் இருந்தது. இப்போது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு இந்திய தூதரகம் இதற்கு உதவி செய்கிறது.
இதே விபத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இந்திரஜித் (22 வயது) என்ற இளைஞரும் காணாமல் போனார். இயந்திர பொறியாளரான அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் மோசமான வானிலை காரணமாக தேர்தல் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திரஜித்தின் தந்தை மற்றும் சகோதரரும் அதே நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். குடும்பத்தினர் இன்னும் நல்ல செய்தி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
