சீனாவின் பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய், ஷாங்துங், ஹேனான் உள்ளிட்ட பகுதிகளில் 29ஆம் நாள் முதல் கன மழை பெய்து வருகின்றது. இக்கடும் மழை பொழிவு 31ஆம் நாள் வரை தொடருமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சீன வானிலை ஆய்வு மையம் மிக உயர் நிலையான எச்சரிக்கையை 30ஆம் நாள் தொடர்ந்து வெளியிட்டது. கணிப்பின்படி, அன்று சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 40முதல் 90 மில்லிமீட்டர் வரையிலான மழை பதிவானது. ஹேபெய் மாநிலத்தின் சின்டெய் பகுதியில் மழை பொழிவு அளவு 479.6 மில்லிமீட்டரை எட்டியது.
கன மழையால் ஏற்படக்கூடிய வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் அரிப்புக்கான கண்காணிப்புப் பணியை வலுப்படுத்த, சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையகம் 5 பணிக்குழுக்களை முக்கியமான வட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.
அதோடு, வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தன்மையை இயன்ற அளவில் உயர்த்திப் புதிய தகவல் மற்றும் முன்னெச்சரிக்கையின் வெளியீட்டை வலுப்படுத்தவுள்ளதாகச் சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.