அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார்.
  சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஈபிஎஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக, ஈபிஎஸ்ஸிற்குப் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும், அவர் கட்சியை விட்டு நீக்கிய நிர்வாகிகளை மீண்டும் இணைக்கக் கோரி ஈபிஎஸ்ஸிற்குக் கெடு விதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இதன் காரணமாகவே கடந்த செப்டம்பர் மாதம் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்
 
                 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                             
                                
                         
                                                 
                                                 
                                                