ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு விரிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் பரவியுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் எவை என்பது குறித்த புதிய வரையறையை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
இந்த வரையறை சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குச் சாதகமாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
