தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்தபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பை ஏற்று அக்டோபர் 31ஆம் நாள் பிற்பகல் ஜப்பானிய தலைமையமைச்சர் சனே கதைச்சியுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனா ஜப்பானுடன் இணைந்து, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான 4 அரசியல் ஆவணங்களின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகள் மற்றும் திசைக்கு இணங்க, இரு தரப்பு உறவுக்கான அரசியல் அடித்தளத்தைப் பேணிக்காக்கவும், பரஸ்பர நலன் தரும் நெடுநோக்கு உறவுகளை ஊக்குவிக்கவும், புதிய யுகத்தின் தேவைகளுக்கு பொருந்திய ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான சீன-ஜப்பானிய உறவின் உருவாக்கத்தை அர்ப்பணிக்கவும் விரும்புவதாக தெரிவித்தார்.
சனே கதைச்சி கூறுகையில், சீனாவுடன் உயர் நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தவும், பல்வேறு நிலை பரிமாற்றத்தை நெருங்கவும், தொடர்பு மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கவும், ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும், இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நலன் தரும் நெடுநோக்கு உறவுகளை முன்னேற்றவும், ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான ஜப்பானிய-சீன உறவை உருவாக்கவும் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், தைவான் பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், 1972ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஜப்பான்-சீனா கூட்டு அறிக்கைகளின் கீழ் உள்ள நிலைப்பாட்டில் ஜப்பான் ஊன்றி நிற்கும் என்று தெரிவித்தார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                             
                             
                             
                                                 
                                                 
                                                