திரைப்பட நடிகை கவுரி கிஷன் உருவக் கேலி விவகாரம் குறித்து மனம் திறந்து, “உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை நாம் கடந்து செல்ல வேண்டும்.” என்று வலியுறுத்தி ஓர் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவருக்கும் ஒரு பத்திரிகையாளருக்கும் இடையே நடந்த உரையாடல் எதிர்பாராத விதமாகச் சிறிது பதட்டமாக மாறியதையடுத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உருவக் கேலி நகைச்சுவை என்ற பெயரில் இன்றும் தொடர்கிறது என்றும், தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவரைப் பழிவாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் கவுரி கிஷன் தெளிவுபடுத்தியுள்ளார்.
உருவக் கேலி குறித்து நடிகை கவுரி கிஷன் உருக்கமான அறிக்கை
