2024ஆம் ஆண்டு சீனப் பயணியர் விமான நிலையங்களின் சேவைத் தரம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இது சீனப் பயணியர் விமான நிலைய சங்கம், சீனப் பயணியர் விமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்ட அமைப்புகளால் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் சீனாவின் பயணியர் விமான நிலையங்களில் கையாளப்பட்ட பயணங்கள் போக்குவரத்து 146கோடியை எட்டியுள்ளது. விமானங்களின் இயக்கம் ஒரு கோடியே 24லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட, இவை முறையே 15.9விழுக்காடு மற்றும் 5.9விழுக்காடு அதிகரித்து வரலாற்றின் புதிய புதிவை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.