சீனாவின் ஹாங்சோ நகரில், நவம்பர் 3ஆம் நாள், சீன-ரஷிய தலைமை அமைச்சர்களது 30ஆவது குறிப்பிட்டக்கால சந்திப்புக்கு சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், ரஷிய தலைமையமைச்சர் மிஷுஸ்டின் ஆகிய இருவரும் தலைமை வகித்தனர்.
அப்போது லிச்சியாங் கூறுகையில்,
சீனாவும் ரஷியாவும் நம்பத்தக்க அண்டை நாடுகளாகவும் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும். நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகவும் விளங்குகிறது.
இரு நாடுகள் மாபெரும் நினைவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இரு தரப்பும் நட்புறவை மேலும் ஆழமாக்கி வருகின்றன. இவ்வாண்டில் இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2 முறை சந்தித்துரையாடி, இரு தரப்புறவு தொடர்ந்து முன்னேறி, உயர் நிலையில் வளர்வதற்குத் தலைமை வகித்தனர். தற்போதைய சர்வதேச நிலைமை ஆழமாக மாறி வருவதுடன், ரஷியாவுடன் இணைந்து, இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகள் என்ற அடிப்படையில் நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலன்களைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.
மிஷுஸ்டின் கூறுகையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றோம். எதிர்காலத்தில், சீனாவின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி மேலும் மாபெரும் சாதனைகளைப் பெறும் என்று நம்புகின்றேன் என்றார்.
