சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 12ஆம் நாள், சீனாவின் நாகரிகக் குடும்பங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் ஒரு பகுதியாக குடும்பத்திலும் குடும்பக் கல்வியிலும், குடும்பப் பாணியிலும் கவனம் செலுத்துதல் என்ற கட்டுரை பிப்ரவரி முதல் நாள், ஜியு ஷி இதழில் வெளியிடப்படவுள்ளது.
சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களும், குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். குடும்ப நாகரிகக் கட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு குடும்பங்கள், நாட்டு வளர்ச்சி, தேசிய இன முன்னேற்றம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பொது மக்கள் கனவுகளை நனவாக்கும் தளமாக குடும்பம் மாற வேண்டும் என்பதோடு, எல்லோரும் குடும்பத்திலும் குடும்பக் கல்வியிலும், குடும்ப பாணியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.