15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீன சுங்கத்துறை தனது பணியில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளித்து, ஏற்றுமதியை அதிகரிப்பதோடு இறக்குமதியையும் உகந்த அளவில் அதிகரித்து, சர்வதேச சுழற்சியை விரிவாக்கும். சீன சுங்கத்துறை தலைமை நிர்வாகத்தின் தலைவர் சுன் மென்ஜுன் ஜனவரி 17ஆம் நாள் 2026ஆம் ஆண்டு தேசிய சுங்கத்துறை பணி கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஓராண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் பாதகமான நிலையிலும் வளர்ச்சி அடைந்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 45.47 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டு அசாதாரண ஆண்டாகும். சீனச் சுங்கத்துறை திறப்பு மூலம் தடைகளைத் தீர்த்து, வசதிமயமாக்கத்துடன் சந்தைகளை விரிவாக்கி, வெளிநாட்டு வர்த்தகத்தின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது. உலகளாவிய சரக்கு வர்த்தகத்தில் சீனா தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதலிடம் வகித்துள்ளது என்று சுன் மென்ஜுன் குறிப்பிட்டார். புதிய ஆண்டில் சீனச் சுங்கத்துறை வளர்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளை செவ்வனே ஒருங்கிணைத்து, திறப்பை விரிவாக்கி ஒத்துழைப்பை மேம்படுத்துவது, சீர்திருத்தம் மற்றும் நிறுவனமய புத்தாக்கத்தை ஆழமாக்குவது உள்ளிட்ட துறைகளில் மேலும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் சிறந்த தொடக்கத்துக்கு பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
