கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார்.
ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அப்போது, டெல்லியில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார்.
