மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில் உரையாற்றியவர்,
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீட்டு மாநாடுகள் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் மக்களை ஏமாற்றும் திமுக அரசு தேவையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அரசு கொடுக்கும் வரி உண்மையா? என மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் 21 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினோம் என்றும் அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் தன்னிறைவு பெறும் வகையில் அடிப்படை வசதிகளைக் கொடுத்தோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் என் வீட்டிற்கு ரூ.5,000 ஆக இருந்த மின் கட்டணம், இப்போது ரூ.12,000 ஆக உயர்ந்துள்ளது, என்றும் திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
2026 இல் வெற்றி பெறுவோம் என்பது திமுகவின் பகல் கனவாகத் தான் இருக்கும் என்றும் 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றும் மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் இந்த திமுக ஆட்சி தேவையா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.