பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு இந்திய ராணுவம் முழுத் தயார்நிலையில் உள்ளது என்றும், எந்தவொரு கோழைத்தனமான செயலுக்கும் வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை என்றால், அந்த நாடு தனது “புவியியல் இருப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய” நேரிடும் என்றும் அவர் மிகக் கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தார்.
பயங்கரவாதம் தொடர்ந்தால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நிச்சயம்:ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை
