சீன உள் துறை விவகார அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் சமீபத்தில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட செய்தியில், 2025ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் முதியோர் பராமரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 700 ஆகும். இதில் பணி புரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 22 ஆயிரமாகும். இது, 2024ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் தனியார் முதியோர் பராமரிப்பு நிறுவனங்களின் விகிதம் 52.2 விழுக்காட்டை எட்டியுள்ளது.
அடுத்தாக, அரசு கொள்கை ரீதியில் ஆதரவுகளையும் வழிகாட்டலையும் வலுப்படுத்தி முதியோருடன் தொடர்புடைய துறையின் வளர்ச்சிச் சுற்றுச் சூழலை மேம்படுத்தும் வகையில், தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெள்ளி பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியைத் தூண்டி, முதியோருக்கான நலன்களை மாபெரும் முயற்சியுடன் சீன உள்துறை விவகார அமைச்சகம் விரைவுபடுத்தும் என்றார்.
