ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், வியாழன் (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் இருந்த 242 பேரும் பலியானதாக காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. லண்டன் செல்வதற்காக கிளம்பிய இந்த விமானத்தில் 232 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்தனர்.
மேகானி நகர் அருகே உள்ள மருத்துவர்கள் விடுதியின் மெஸ்ஸில் விமானம் மோதிய நிலையில், ஐந்து மருத்துவ மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
விமானம் விபத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை எழுந்தது. விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் பலி என தகவல்
