ஃபிஜி தலைமையமைச்சர் சிதிவேணி ரபுகா, 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சீனாவில் பயணம் மேற்கொண்டார்.
பெய்ஜிங் வருவதற்கு முன்பு, யுன்னான், ஃபூஜியான், சேஜியாங் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றார். சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறுகையில், புதிய எரியாற்றல் துறையில் சீனா உலகத்தின் முன்னணியில் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை விரைவுபடுத்தி, மேலும் உயர்வேக வளர்ச்சியை நனவாக்க ஃபிஜி விரும்புகிறது என்றார்.
சீன-ஃபிஜி உறவு பற்றி அவர்n.mmooookoo .. கூறுகையில், சீனாவும் ஃபிஜியும் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, குறிப்பாக தத்தமது வேறுபாடுகளுக்கு மதிப்பு அளித்து வருகின்றன. மேலும், ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, கூட்டு வளர்ச்சியை நாடுகிறோம் என்று தெரிவித்தார்.
சீனாவின் வளர்ச்சியின் சாதனைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். எதிர்காலத்தில், இரு நாடுகள் மேலதிக துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலும் நெருங்கிய சீன-பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.