பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் சீனாவுக்கு வருகை தரவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன் டிசம்பர் முதல் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாக்ரொன் சீனாவில் பயணம் மேற்கொள்வது இது 4வது முறையாகும். பிரான்ஸுடன் இணைந்து சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் புதிய வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விரும்புகிறது. இப்பயணத்தின் போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய நிலைமையில் இரு நாட்டு உறவு, முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரிச்சினைகள் ஆகியவை குறித்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர். சீன தலைமை அமைச்சர், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி தலைவர் ஆகியோரும் மாக்ரொனுடன் சந்திப்பு நடத்தவுள்ளனர் என்று தெரிவித்தார்.
