மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாகும்.
இதன் வெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளை எளிதாக்குவதில் அரசாங்கத்தின் பங்கை தெளிவுபடுத்தினார்.
மேலும், செயற்கைகோள் இன்டர்நெட் சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான செயல்பாட்டு காலக்கெடு தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்தது என்று கூறினார்.
இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே உரிமத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளன என்றும் மூன்றாவது நிறுவனம் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கோடிட்டுக் காட்டிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருக்கும்.
இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்
