தைவான் சுந்திரத்தில் ஈடுபடும் வென் ச்சியூ, சென் பாயுவான் ஆகிய இருவரின் குற்றங்கள் தொடர்பான துப்புகளைத் திரட்டும் சுற்றறிக்கையை சீன ஃபூச்சியேன் மாநிலத்து சுவான்சோ நகரக் காவற்துறை அண்மையில் வெளியிட்டது.
மேற்கூறிய இருவரும் கடந்த மார்சு 26ஆம் நாளன்று சீன அரசவையால் தைவான் சுந்திரச் சக்திகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின்படி, இவர்கள் நீண்டகாலமாக பெருநிலப்பகுதியின் கொள்கைகளுக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதோடு, பெருநிலப் பகுதியைச் சேர்ந்த தைவான் குடிமக்களின் வாழ்க்கைத் துணைகளையும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
இந்த இருவரைப் பற்றியும் துப்பு கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 இலட்சத்து 50 ஆயிரம் யுவான் வரையான சன்மானம் வழங்கப்படும் என்று காவற்துறை அறிவித்துள்ளது.
