தென்னாப்பிரிக்காவில் “உலக ஆட்சி முறை-இளைஞர் செயல்பாடு” ஊடக நடவடிக்கை

சீன ஊடக குழுமம் 11ஆம் நாள், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில், “உலக ஆட்சி முறை-இளைஞர் செயல்பாடு” ஊடக நடவடிக்கையை நடத்தியது.

இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் எழுத்து மூலம் உரை நிகழ்த்தினார்.

ஜோகன்ஸ்பர்க் நகருக்கான துணை தூதர் பாங்ச்சிங்ஜியாங், அந்நாட்டின் அரசாங்க அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், ஊடக நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிகத் துறை நிறுவனங்கள் முதலியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டோர் முக்கியமாக உலக நிர்வாக முறையில் இளைஞர்களின் தகுநிலை, சீன-ஆப்பிரிக்க நவீனமயமாக்கத்தில் எண்ணியல் புத்தாக்கத்தின் ஒத்துழைப்பு, இரு நாடுகளின் இளைஞர்கள் தொழில் நடத்தி தொடரவல்ல வளர்ச்சியை அடைதவற்கான வழிகள் முதலியவை குறித்து விவாதித்தனர்.

You May Also Like

More From Author