சிச்சுவான் மற்றும் ஷான்ஷி மாநிலங்களில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜூலை 25 முதல் 27ஆம் நாள் வரை சிச்சுவான் மாநிலத்தின் குவாங்யுவான், டெயாங் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
ஜூலை 27ஆம் நாள், சிச்சுவான் மாநில கட்சிக் கமிட்டி மற்றும் அரசு வழங்கிய பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிந்தார். இம்மாநிலத்தின் பல்வேறு துறைகளில் பெறப்பட்டுள்ள சாதனைகளை அவர் பாராட்டியதோடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், நவீனமயமாக்கத் தொழில் அமைப்புமுறையின் கட்டுமானம், கிராமப்புற வளர்ச்சி, யாங்சி ஆறு மற்றும் மஞ்சள் ஆற்றின் மேல்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிச்சுவான் மேலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஹான்ஜியாங் ஆற்றுப்பள்ளத்தாக்கில் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பரவலிலும், உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஷி ச்சின்பிங் கவனம் செலுத்தி வருகிறார். ஜூலை 29ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்திலிருந்து பெய்ஜிங்கிற்குத் திரும்பிய வழியில், அவர் ஷான்ஷி மாநிலத்தின் ஹான்சொங் நகரில் பயணம் மேற்கொண்டார். ஹான்சொங் அருங்காட்சியகத்தில், நகரின் வரலாறு மற்றும் பண்பாட்டையும், தொல் பொருட்களுக்கான பாதுகாப்பையும் அறிந்து கொண்டார்.
தவிரவும், தியான்ஹான் ஈரநிலப் பூங்காவை அவர் மேற்பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், சூழலியல் பூங்காவின் கட்டுமானமானது, இயற்கையுடன் இசைவாக இருக்க வேண்டும். அன்றாட உற்பத்தி மற்றும் வாழ்க்கையுடன் இணைந்து உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author