ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 53ஆவது கூட்டம் ஜுன் 19 முதல் ஜுலை 14ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனப் பிரதிநிதிக் குழு பல்வேறு கருப்பொருட்களிலான விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, வளரும் நாடுகளின் கூட்டு நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் முன்முயற்சியுடன் கருத்துகளையும் திட்டங்களையும் முன்வைத்து, சமத்துவம் மற்றும் நீதியைப் பேணிக்காக்கும் வகையில் செயல்பட்டது. இதனால், சீனாவின் பணி பயனடைந்துள்ளதோடு, சர்வதேசச் சமூகத்தின் ஆதரவு மற்றும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மனித உரிமைகள் அனைத்தையும் அனுபவிப்பதில் வளர்ச்சியின் பங்கு என்ற தலைப்பில் சீனா வழங்கிய தீர்மானம் நடப்புக் கூட்டத்தில் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சூடான், ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகள் இம்முக்கியமான தீர்மானத்தைப் பாராட்டியதோடு, சீனாவின் தலைமை பங்கிற்கு நன்றி தெரிவித்தன.
பலதரப்பு மனித உரிமை இயங்குமுறையின் பணிகளில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, உலக மனித உரிமை மேலாண்மையின் சமமான மற்றும் நியாயமான வளர்ச்சியையும் மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தையும் முன்னேற்றுவதாக சீனத் தூதர் சென் சூ தெரிவித்தார்.