ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனை..!!

Estimated read time 1 min read

கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்த காரணத்தினால், தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது.

அமெரிக்கா – ஈரான் இடையேனா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கி, எரிப்பொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவான நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியது.

நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.235-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.13,150க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000க்கும் விற்கப்படுகிறது

You May Also Like

More From Author