ரஷியா, சாம்பியா, தென்னாபிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் லீ ச்சியாங் பயணம்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் நவம்பர் 13ஆம் நாள் கூறுகையில், ரஷியத் தலைமையமைச்சர் மிகைல் விளாடிமிரோவிச் மிஷுஸ்டினின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 17, 18ஆகிய நாட்களில் ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் செயற்குழுவின் 24வது கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார். மேலும், சாம்பியா அரசின் அழைப்பை ஏற்று, லீ ச்சியாங் நவம்பர் 19, 20 ஆகிய நாட்களில் அந்நாட்டில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்னாப்பிரிக்க அரசின் அழைப்பை ஏற்று, நவம்பர் 21 முதல் 23ஆம் நாள் வரை ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றவுள்ள ஜி20 தலைவர்களின் 20வது உச்சிமாநாட்டில் லீ ச்சியாங் பங்கெடுக்கவுள்ளார் என்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ள சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், பல்வேறு தரப்பினருடன் இணைந்து, தியான்ஜின் உச்சிமாநாட்டில் பெறப்பட்டுள்ள சாதனைகளைச் செயல்படுத்தி, ஒற்றுமையுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பிரதேசப் பொருளாதாரம் மற்றும் மானுடவியல் ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார் என்றும் லின்ஜியான் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author