14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கினார்.
இந்த அரசுப் பணியறிக்கையில், 2025ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்கும் கடமைகளும் தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பொருளாதாரம் நிதானமான நிலையில் முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 5 விழுக்காடு அதிகரித்து 140.19 டிரில்லியன் யுவானை எட்டியுது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில், பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கத்தின் மூலம் முன்னேற்றம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன்கள், பசுமையான மற்றும் கார்பன் குறைந்த வளர்ச்சி உள்ளிட்ட 20 துறைகள் குறித்து 20 முக்கிய இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முழு சமூகத்திலும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 7 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கான கரியமில வாயு வெளியேற்ற அளவு 17 விழுக்காட்டைக் குறைக்க வேண்டும் என்றும் இந்த அரசுப் பணியறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு 4.5 முதல் 5 விழுக்காடு வரை இருக்கும். நகரபுறங்களில் புதிய வேலை வாய்ப்புகள் ஒரு கோடியே 20 இலட்சத்தைத் தாண்டும். நகரவாசிகளின் வருமான அதிகரிப்பு விகிதமும் பொருளாதார வளர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும். சர்வதேச நிதிச் சந்தையில் வரவு செலவின் சரிசம நிலை நனவாக்கும். தானிய உற்பத்தி அளவு 70 கோடி டன்னைத் தாண்டும் என்றும் லீ ச்சியாங் தெரிவித்தார்.
தவிரவும், இந்த பணி அறிக்கையில் சீனா வெளிநாட்டுத் திறப்புகளை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக இப்பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை தொழில் துறையை மையமாக கொண்டு, சந்தை நுழைவுக்கு அனுமதி அளித்தல் மற்றும் வெளிநாட்டுத் திறப்புத் துறைகளை விரிவாக்கி, தொலை தொடர்பு, உயிரியல் தொழில் நுட்பம், அந்நிய முதலீட்டு மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டுத் திறப்புப் பணிகளை சோதனை முறையில் மேற்கொள்ளும்.
தவிரவும், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் சீனா முழுமையாகவும் ஆழமாகவும் கலந்துகொள்ளும். சேவை ஏற்றுமதிக்கு ஊக்குமளித்து, இறக்குமதியை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, வர்த்தகத்தின் சமநிலை வளர்ச்சியைத் தூண்ட சீனா பாடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
