வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள், நவம்பர் 16ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
அதற்கு அடுத்த நாள் நவம்பர் 17 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் கனமழை பெய்யும் என IMD கூறியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
