நமீபியாவின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெடும்போ நந்தி-என்டைத்வா அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 5ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவுக்கும் நமீபியாவுக்கும் இடையிலான ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை வலுவடைந்து, பயனுள்ள ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளன. தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் இரு நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன என்றார்.
மேலும், சீன-நமீபியா உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன். அரசுத் தலைவர் என்டைத்வா அம்மையாருடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவைப் பரவல் செய்து, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.