சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது.
அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (22-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,600க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,825க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று முன் தினத்தின் நிலவரப்படி (20-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,680க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,835க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.97.65க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.