முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றியவருமான மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க.விலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்த நிலையில், அவருக்கு உடனடியாகக் கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மைத்ரேயன், புதிதாக உருவாக்கப்பட்ட தி.மு.க.வின் கல்வியாளர் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்சிகளில் அங்கம் வகித்து, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த மைத்ரேயனின் அரசியல் அனுபவம், தி.மு.க.வின் கல்வி சார்ந்த பணிகளுக்கும் களப்பணிகளுக்கும் பயன்படும் வகையில் இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்துள்ள முக்கியப் பிரமுகர்களுக்குப் பதவி வழங்கும் நிகழ்வின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது
