சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 29ஆம் நாள் முற்பகல் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கான மத்திய ஆணையத்தின் 6ஆவது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, புதிய யுகத்தில் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது என்ற அடிப்படையில் முன்னேறி வருகிறது. ஏற்கனவேயுள்ள சீர்திருத்த சாதனைகளையும் முக்கிய அனுபவங்களையும் சீராக பயன்படுத்தி, சீர்திருத்தக் கடமைகளைச் செவ்வனே செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றி கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் பன்முகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, 300க்கு அதிகமான முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பிறகு, கட்சியின் மத்திய கமிட்டியின் ஏற்பாட்டுடன், 22 தாராள வர்த்தகச் சோதனை மண்டலங்கள் நிறுவப்பட்டன.
உயர் நிலையுடைய திறப்பை வழிகாட்டலாகவும், அமைப்பு முறை புத்தாக்கத்தை மையமாகவும் கொண்டு, முழு தொழில் சங்கிலியின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றி, வெளிநாட்டு வர்த்தகத்தின் ஒட்டுமொத்த போட்டியாற்றலை வலுப்படுத்தி, முதலீட்டின் தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.