தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான ஓ பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுக இணைய வேண்டும் என கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.
ஏற்கனவே ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் நடிகர் விஜயுடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தற்போது இதற்காக தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. மேலும் தனது கட்சி தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துவிட்டு விஜயுடன் கூட்டணி குறித்து அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
