சீனா டிசம்பர் 15ஆம் நாள், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸிடம், கடல் உயிரியல் பல்வகைமை ஒப்பந்தத்தின் ஒப்புதல் பத்திரத்தைச் சமர்ப்பித்தது என்று ஐ.நாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 23ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தம், கடல் சட்டத்துக்கான ஐ.நாவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்வேறு நாடுகள் ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கூடுதல் சட்டம் மற்றும் வரையறைகளை வழங்குகிறது.
இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் சீனா முழுமையாகப் பங்கெடுத்து, இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட முதலாவது தொகுதியான நாடுகளில் ஒன்றாக விளங்கியுள்ளது.
190க்கும் மேலான நாடுகள் 19 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது கடல் பாதுகாப்பு மற்றும் பலதரப்புவாதத்தின் வரலாற்று தன்மை வாய்ந்த சாதனை ஆகும் என்று அன்டோனியோ குட்ரேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
