உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் தனது சமீபத்திய ‘குளோபல் மேக்ரோ அவுட்லுக்’ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறித்த தனது கணிப்பை 7 சதவீதமாக மூடிஸ் தக்கவைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, 2026இல் 6.4 சதவீதமும், 2027இல் 6.5 சதவீதமும் வளர்ச்சி இருக்கும் என்று மூடிஸ் கணித்துள்ளது.
உறுதியான உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதியில் தொடரும் பன்முகத்தன்மை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்திகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை
