வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும், சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?
