பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அரசியல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‘ஜன் சுராஜ் கட்சி’ (Jan Suraaj Party) மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் வியூக அமைப்பாளரும் பிரசாந்த் கிஷோர் என்பதும் குறிப்பிடதக்கது.
தவெக வரும் 2026 தேர்தலை இவரின் வழிநடத்தலில் கீழ் சந்திக்கவுள்ளது.
இந்த நிலையில் தான் ஜன் சுராஜ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கவுள்ளது.
