இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘கும்கி 2’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
நிதிப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ‘கும்கி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கும்கி 2’ உருவாக்கப்பட்டுள்ளது.
அறிமுக நடிகர் மதி மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
‘கும்கி 2’ திரைப்படத்திற்குத் தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
