சீனாவில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஷாங்க்ஜியாகாங் நகரில் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான யோங்சிங் புத்த கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்தக் கோயிலின் அடுக்குமாடி பகுதியில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மளமளவென பரவி எரிந்ததில், அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லையெனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தீ விபத்துகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
