ரஷ்யா தனது புதிய உயிர் செயற்கைக்கோள் Bion-M No. 2-ஐ ஏவியுள்ளது. இது 75 எலிகள் மற்றும் பிற உயிரினங்களை ஒரு மாத கால ஆய்வுக்காக பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பியுள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று ஏவப்பட்ட இந்த திட்டம், உயிரினங்களின் மீது விண்வெளிப் பயணம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த முக்கியமான தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது எதிர்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான மனித பயணங்களுக்குத் தயாராக உதவும்.
எலிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மினியேச்சர் மவுஸ் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் உணவு, கழிவு மேலாண்மை மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்புக்கான அதிநவீன அமைப்புகள் உள்ளன.
இந்த திட்டத்தில், பழ ஈக்கள், தாவர விதைகள் மற்றும் நுண்ணுயிரிகளும் இடம்பெற்றுள்ளன.
விண்வெளி ஆய்வுக்காக 75 எலிகளுடன் செயற்கைக்கோளை ஏவியது ரஷ்யா
