நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
எய்டன் மார்க்ரம் (31), ரியான் ரிக்கல்டன் (23) மற்றும் வீன் முல்டர், டோனி டி ஜோர்சி தலா 24 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்கள் எடுத்தது.
இந்தியத் தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
INDvsSA முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி
