சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் மக்கெளவைச் சென்றடைந்தார்.
20ஆம் நாள் நடைபெறவுள்ள மக்கெள தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டத்திலும், மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசு பதவி ஏற்கும் விழாவிலும் அவர் கலந்து கொண்டு, மக்கெளவில் ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
விமான நிலையத்தில் ஷிச்சின்பிங் சீன மத்திய அரசு மற்றும் பல்வேறு தேசிய இன மக்களின் சார்பில், மக்கெளவின் குடிமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த வணக்கம் மற்றும் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில், மக்கெளவின் தனிச்சிறப்புடைய “ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் நடைமுறை, உலகத்தை ஈர்க்கும் வெற்றி பெற்று, உயிராற்றலையும் தனிச்சிறப்பு மிக்க ஈர்ப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளது. நாடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகிறது.
மக்கெளவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இது, மக்கெள குடிமக்களின் பெருமை மட்டுமல்ல, சீன மக்கள் அனைவரின் பெருமையுமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.