சீனக் கல்வி துறை அமைச்சகம் நவம்பர் 16ம் நாள் முன்னெச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அண்மை காலத்தில் ஜப்பான் சமூகத்தில், சீன மக்களின் மீது இழைத்த குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பாதுகாப்பு நிலைமையும் கல்வி பயிலும் நிலைமையும் சீராக இல்லை. ஜப்பானிலுள்ள சீன மக்களுக்கான பாதுகாப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜப்பானிலுள்ள சீன மாணவர்கள், ஜப்பானுக்குச் செல்லவுள்ள சீன மாணவர்கள் ஆகியோர், சமூக பாதுகாப்பு நிலைமையில் அதிக கவனம் செலுத்தி, அபாயத்தை மதிப்பிட்டு, விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும்.
சீனாவின் குடிமக்கள், ஜப்பானில் கல்வி பயிலும் ஏற்பாடுகளை விழிப்புணர்வுடன் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
