கரூரில் அமமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வில் டிடிவி தினகரன், அண்ணாமலை சந்தித்துக்கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
கரூர், வெண்ணைமலை அருகே தனியார் கலையரங்கத்தில் அமமுக மாவட்ட செயலாளர் பிஎஸ்என் தங்கவேல் மகள் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அமமுக பொது செயலாளர் டி டி வி தினகரன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
அந்த திருமண நிகழ்விற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் வருகை தந்தார். அப்போது அண்ணாமலை, டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய பின் இரண்டு நிமிடம் அமர்ந்து உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை திருமண விழாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
உறவினர் திருமணத்திற்கு வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். இந்த திருமண விழாவிற்கு கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மணமக்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாமலை வருகை – கூட்டணி குறித்து ஏதாவது பேசினீர்களா என்ற கேள்விக்கு?அண்ணாமலை அமுமுக மாவட்ட செயலாளரின் உறவினர்.
கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு? ஜனவரி மாதத்துக்கு பின்பு தெரியும் எனக் கூறினார். அமுமுக 2026 தேர்தல் நிலைப்பாடும் ஜனவரிக்கு பின் தெரியவரும் என தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
