6ஆவது உலக நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு ஜூலை 29முதல் 31ஆம் நாள் ஜெனிவாவில் நடைபெற்றது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் சாவ்லெஜி இம்மாநாட்டில் கலந்து கொண்டு பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று அருமையான உலகைக் கூட்டாகக் கட்டியமைப்பதென்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தன்னுடைய உரையில், மனிதகுலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி லட்சியம் கடும் அறைக்கூவலை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய ரக சர்வதேச உறவின் கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு மற்றும் பொறுப்பு பன்னாட்டு சட்டமியற்றல் நிறுவனங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
மேலும், சீனத் தேசிய மக்கள் பேரவை பன்னாட்டு நாடாளுமன்ற கூட்டணி மற்றும் சட்டமியற்றல் நிறுவனங்களுடன் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.