பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நாட்டின் சமூக – கலாச்சார மற்றும் ஆன்மிகத்தில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்குச் செல்கிறார்.
அன்று காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோயில்களுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோயிலுக்குச் செல்கிறார்.
காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் செல்கிறார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்கிறார்.
நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலின் சிகரத்தில் பிரதமர் மோடி, சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிப்பதாக அமையும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்.
இறைவனின் செயல்களைக் குறிக்கும் வகையில், ஸ்ரீ ராமர் மற்றும் அன்னை சீதா ஆகியோரின் விவாஹ பஞ்சமித் திதியுடன் அபிஜித் முகூர்த்தமும் ஒன்றாக வரும் மார்கழி மாதத்தின் சுக்ல பக்ஷ சுபதினமான பஞ்சமி திதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ம் நூற்றாண்டில், 48 மணி நேரம் அயோத்தியில் தியானம் செய்த சீக்கியர்களின் ஒன்பதாவது மத குருவான குரு தேக் பகதூரின் தியாக தினத்தையும் குறிக்கும் வகையில், இத்தினம் அமைந்துள்ளது. இது அன்றைய தினத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது.
பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட இந்த செங்கோண அமைப்பிலான முக்கோணக் கொடி, பகவான் ஸ்ரீ ராமரின் பிரகாசத்தையும், வீரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஒளிரும் சூரியனின் உருவத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவிதார மரத்தின் படத்துடன் ‘ஓம்’ என்ற குறியீடும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புனிதமான காவி கொடி, ராம ராஜ்யத்தின் லட்சியங்களை உள்ளடக்கிய கண்ணியம், ஒற்றுமை மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சி போன்ற அம்சங்களை செய்தியாகச் சுமந்து செல்லும்.
பாரம்பரிய வட இந்திய நாகரா கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் சிகரத்தின் உச்சியில், இந்தக் கொடி ஏற்றப்படும். கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியக் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட, 800 மீட்டர் சுற்றளவு கொண்ட சுற்றுச் சுவர், கோயிலின் கட்டிடக்கலை பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கோயிலின் பிரதான வெளிப்புறச் சுவர்களில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட 87 நிகழ்வுகள், கற்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களின் அருகே இந்தியக் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட 79 வெண்கல வார்ப்பினாலான காட்சி அமைப்புக்களும் கோயில் வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து, பார்வையாளர்கள் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் குறித்த ஆழமான நுண்ணறிவை அளிப்பதுடன், ஒரு பயனுள்ள மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தையும் வழங்குகின்றன’ என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு [மேலும்…]
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய இளைஞர்கள் தொழில்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை [மேலும்…]
தென்காசி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம் அருவியின் அருகில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குற்றாலநாதர் திருக்கோவில். நடராஜரின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான [மேலும்…]
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் அங்குரேஸ்வரர் திருக்கோவில். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் [மேலும்…]
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் [மேலும்…]