சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் டிசம்பர் 8ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தில் சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 3லட்சத்து 90ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 4.1விழுக்காடு அதிகரித்துள்ளது.
அவற்றில் ஏற்றுமதித் தொகை 2லட்சத்து 35ஆயிரம் கோடி யுவானையும் இறக்குமதித் தொகை 1லட்சத்து 55ஆயிரம் கோடி யுவானையையும்த் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை விட, இவை முறையே 5.7விழுக்காடு மற்றும் 1.7விழுக்காடு அதிகரித்துள்ளது.
மின்சார இயந்திர உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கான முக்கிய பகுதியாகி கடந்த ஆண்டை விட, 8.8விழுக்காடு அதிகரித்ததோடு, இக்காலத்தின் மொத்த ஏற்றுமதித் தொகையில் 60.9விழுக்காட்டை வகித்துள்ளது.
இவ்வாண்டு முதல் 11 மாதங்களில், சீனா உலகின் 110க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களான வர்த்தகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் அதிகரிப்பைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
