திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை மையம் திறக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/cIj0jEAP768?si=EqVKIznazTutgqNb
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3 ஆம் தேதி கோயில் கருவறை முன் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன.
இதற்கு 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் நெய் காணிக்கை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆர்வமுடன் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
ஒரு கிலோ நெய் 250 ரூபாய்க்கும் அரை கிலோ நெய் 150 ரூபாய்க்கும் பெறப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படுகிறது.
