சீனச் சந்தைக்கான முதலீட்டை விரிவாக்கும் அன்னியநிதி நிறுவனங்கள்

Estimated read time 1 min read

நிதித்துறையில் பல திறப்பு நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, சீனாவின் நிதித்துறையில் திறந்த நிலை சீராக விரிவாகி வருகிறது.

சீன நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ய உதவுவது மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து வரும் சிறந்த மூலதனங்களை உள்நாட்டில் ஈர்க்கவும் சீன நிதி சந்தையின் வளர்ச்சியில் கூட்டாக பங்கெடுக்கவும் இது துணைபுரியும்.

நிதி சார் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான திறப்பு நிலையை உயர்த்தும் வகையில், இவ்வாண்டிலிருந்து, சீனாவின் நிதி ஒழுங்குமுறை நிர்வாகங்கள் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, பத்திர சந்தையின் பரஸ்பர தொடர்பு மற்றும் இணைப்பு அமைப்புமுறையை இடைவிடாமல் முழுமைப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் அதிகமான முதலீட்டு வழிகளை வழங்குகின்றது.

தற்போது வரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்துள்ள சீனப் பத்திரங்களின் தொகை 4இலட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சீனாவின் நாணயமான ரென்மின்பி சர்வதேசமயமாக்கல் சீராக முன்னேறுகின்றது. 2024ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், சரக்கு வர்த்தகம் குறித்த கணக்கு தீர்ப்பதில் ரென்மின்பியைப் பயன்படுத்திய பங்கு 26.5விழுக்காடு வகித்தது.

தவிர, கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் நிதி சேவை துறை சார் சந்தை நுழைவுக்கான அனுமதி பெரியளவில் விரிவடைந்துள்ளது. சீனாவின் வங்கிகள், பத்திரங்கள், நிதியங்கள் நிர்வாகம், முன்பே வர்த்தகம், காப்பீடு ஆகிய துறைகளில், வெளிநாட்டு முதலீடு குறிப்பிட்ட விழுகாட்டு வகிப்பதற்கான கட்டுபாடு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் சீனச் சந்தையில் பங்கெடுக்க துரிதமாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாண்டின் ஜுன் திங்கள் வரை சீனாவில், வெளிநாட்டு வங்கிகள் மொத்தம் 41 நிறுவனங்களையும், 116 கிளை வங்கிகளையும், 127 பிரதிநிதி அலுவலகங்களையும் நிறுவியுள்ளன என்று தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. சீனாவில் வெளிநாட்டு வங்கிகளின் மொத்த சொத்துகள் 3இலட்சத்து 87ஆயிரம் கோடி யுவானை எட்டியது. மேலும், வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் சீனாவில் 67 நிறுவனங்களை அமைத்துள்ளன. சீனாவில் அன்னிய காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த சொத்துகள் 2இலட்சத்து 67ஆயிரம் கோடி யுவானை எட்டியது.

Please follow and like us:

You May Also Like

More From Author