7ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக் கூட்டம் நவம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், சீன-ரஷிய எரியாற்றல் ஒத்துழைப்பானது இரு தரப்புக்கிடையே ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளில் முன்மாதிரியாக விளங்குகிறது. ரஷிய தரப்புடன் இணைந்து பன்முக எரியாற்றல் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவைத் தொடர்ந்து வலுப்படுத்தி உலக எரியாற்றல் தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியின் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும், உலகளாவிய எரியாற்றல் பாதுகாப்பு மற்றும் கார்பன் குறைந்த பசுமை மாற்றத்துக்கு மேலதிக நிலைப்புத் தன்மையை வழங்க வேண்டும் என்றும் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதே நாள், ரஷிய அரசுத் தலைவர் புதினும் இக்கூட்டத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
