ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, `ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுத்து வருகிறது. இதனை கண்டித்து டிச.11 – 12 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டம் நடத்தவிருப்பதாகவும், சென்னையில் டிச.27ம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகவும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
