செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence – AI) துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, அமெரிக்காவின் டெக் உலகையே மிரள வைத்துள்ள சீனப் பெண்மணிதான் டாக்டர் ஃபெய்-ஃபெய் லி (Fei-Fei Li). AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான நபர்களில் ஒருவரான இவர், சமீபத்தில் ‘குயின் எலிசபெத் பொறியியல் பரிசைப்’ பெற்றுள்ளார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் (Computer Science) பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஃபெய்-ஃபெய் லி, தற்போது ‘வேர்ல்ட் லேப்ஸ்’ (Scent Labs) என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், அதன் மதிப்பு ஏற்கனவே ஒரு பில்லியன் டாலரைக் கடந்துவிட்டது.
இதன் காரணமாகவே, இவர் AI துறையின் “ராஜமாதா” என்று அழைக்கப்படுகிறார். ஏஐ துறையில் சிறந்து விளங்கும் ஏழு பேருக்கு மட்டுமே வழங்கப்படும் குயின் எலிசபெத் பொறியியல் பரிசைப் பெற்ற ஒரே பெண் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
